நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த 05 மற்றும் 06 திகதிகளில் ஏற்பட்ட அமைதியின்மை மற்றும் அதற்கான காரணங்கள் குறித்து விரிவான விசாரணையை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (07) பிற்பகல்
விசாரணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது.
ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோவின் தலைமையிலான இந்தக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி மிலிந்த குணதிலக்க, ஜனாதிபதி சட்டத்தரணி மொஹான் வீரகோன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
இந்த விசாரணைக்குழுவின் செயலாளர்/அழைப்பாளராக ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் கே.எல்.டீ அசேல நியமிக்கப்பட்டுள்ளார்.












