சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை: இலங்கை ஆராய்வு

16 வயதிற்குட்பட்ட சிறுவர்களிடையே சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடை செய்வது அல்லது கட்டுப்படுத்துவது தொடர்பான முன்மொழிவுகளை ஆராய்வதற்காக, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு முதற்கட்டப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களால் ஏற்படும் சமூக, மனரீதியான மற்றும் ஆரோக்கிய பாதிப்புகள், டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் உலகளாவிய முன்னேற்றங்கள் குறித்து இந்த ஆலோசனைகளில் கவனம் செலுத்தப்படுவதாக பிரதமர் கூறினார்.

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கான தேசிய வழிகாட்டுதல்களை வரைவு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், அத்துடன் சிறுவர்களின் மன-உடல் நலனைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், 18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மொபைல் போன் (கைபேசி) அடிமைத்தனத்திலிருந்து மீள்வதற்கு உதவும் வகையில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு திட்டமொன்றை நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும், அது ஏற்கனவே சாதகமான முடிவுகளைக் காட்டியுள்ளதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (08) உரையாற்றியபோதே பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்த விபரங்களை வெளியிட்டார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles