நீர்கொழும்பு சிறையில் மாயமான துப்பாக்கி மீட்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து காணாமல் போயிருந்த துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

‘ரிப்பீட்டர்’ (Repeater) ரகத்தைச் சேர்ந்த இந்தத் துப்பாக்கி, சிறைச்சாலை வளாகத்திற்குள்ளேயே வைத்து மீட்கப்பட்டுள்ளது.

கடந்த 6ஆம் திகதிநீர்கொழும்பு சிறைச்சாலையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் திட்டமிடப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, இந்த ‘ரிப்பீட்டர்’ ரகத் துப்பாக்கி காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles