ஹார்முஸ் நீரிணைக்கான 20 சதவீத கட்டண திட்டத்தை கைவிட்டார் டிரம்ப்

ஹார்முஸ் நீரிணை வழியாக கொண்டு செல்லப்படும் அனைத்து சரக்குக் கப்பல்களுக்கும் 20 சதவீத கட்டணம் விதிக்கும் யோசனையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை கைவிட்டுள்ளார்.

அதற்கு பதிலாக, வளைகுடா நாடுகளுடன் வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒப்பந்தங்களை மேற்கொள்ள உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நீர்வழியைப் பாதுகாப்பதற்காக 20 சதவீத கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை டிரம்ப் முன்மொழிந்த அடுத்த நாளே இந்த திடீர் மாற்றத்தை அவர் அறிவித்துள்ளார்.

“மத்திய கிழக்கு நாட்டுத் தலைவர்களுடன் நடத்தப்பட்ட மிகவும் பயனுள்ள பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில், அமெரிக்காவிற்கான 20 சதவீத இழப்பீட்டுக் கட்டண திட்டத்திற்குப் பதிலாக, பல்வேறு வளைகுடா நாடுகள் அமெரிக்காவில் மேற்கொள்ளவிருக்கும் வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்த நான் முடிவு செய்துள்ளேன்,” என்று அவர் தனது ட்ரூத் சோஷியல் (Truth Social) சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles