வளைகுடாவிலுள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள்மீது ஈரான் தாக்குதல்

ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே ஆறாவது நாளாக மோதல்கள் தீவிரமடைந்துள்ளன.இதன் தொடர்ச்சியாக, அண்டை வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

அதேவேளை, ஈரான் முழுவதிலும் உள்ள பல்வேறு இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்கா நேற்று இரவு முழுவதும் தொடர் குண்டுவீச்சுகளை நடத்தியுள்ளது.

ஜோர்டான், குவைத் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ இலக்குகள் மீது இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மறுபுறம், ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) பகுதியில் சர்வதேசக் கப்பல் போக்குவரத்துக்கு ஈரான் அச்சுறுத்தலாக விளங்குவதைத் தடுக்கும் நோக்கில், ஈரானின் ராணுவத் திறன்களை அழிப்பதற்காக 6 மணிநேரத்திற்கும் மேலாகத் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles