இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளுக்கான கனடாவின் உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டின் (Isabelle Martin), முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
அறிமுகம் மற்றும் மரியாதை நிமித்தமான இச்சந்திப்பின் போது, நாட்டின் தற்போதைய முக்கிய அரசியல் மற்றும் பொருளாதார சமகால நிலைவரங்கள் குறித்து இரு தரப்பினருக்கும் இடையில் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சந்திப்பு குறித்து கனடா உயர்ஸ்தானிகர் தனது உத்தியோகபூர்வ சமூக ஊடகப் பக்கத்திலும் பதிவொன்றை இட்டு உறுதிப்படுத்தியுள்ளார்.










