முன்னாள் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்னவின் மரணம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக இரு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
பொலிஸ் ஊடகப் மேற்படி தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
அத்துருகிரியாவில் உள்ள தனது இல்லத்தில், முன்னாள் பொலிஸ்மா அதிபர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதால் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
அவரது நெஞ்சு பகுதியிலேயே துப்பாக்கிச்சூட்டு காயம் இருந்துள்ளது.
பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருந்த துப்பாக்கியாலேயே அவர் இந்த செயலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.










