நுவரெலியா தபால் நிலையத்தின் மேல் மாடியை, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான தங்குமிடமாக அபிவிருத்தி செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தபால் நிலையத்தின் கீழ் மாடியில் தபால் சேவைகள் வழமை போல் முன்னெடுக்கப்படும் அதேவேளையில், மேல் மாடியில் சுற்றுலாப் பயணிகளுக்கான தங்குமிட மற்றும் உபசரிப்பு வசதிகள் நிறுவப்படும் என்று பிரதி தபால் மா அதிபர் தெரிவித்தார்.
காலனித்துவ ஆட்சிக் காலத்திற்குரிய ஐரோப்பிய கட்டடக்கலை பாணியைப் பிரதிபலிக்கும் நுவரெலியா தபால் நிலையக் கட்டடத்தின் தொன்மை மற்றும் பழமை மாறாத வகையில் இந்த அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
