இஸ்ரேல் நாடாளுமன்றம் இன்று கலைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் 27 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆளும் கூட்டணி கடைசி நேரத்தில் முக்கிய சில சட்டமூலங்களை நிறைவேற்றிய பின்னரே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.
போருக்கு மத்தியில், அடுத்த தேர்தலில் தனது அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள நெதன்யாகு கடுமையாகப் போராடி வரும் நிலையில், நாடாளுமன்றம் இவ்வாறு கலைக்கப்பட்டு, தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.










