முடிந்தால் கூடியவிரைவில் மாகாணசபைத் தேர்தல் நடத்துமாறு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு பகிரங்கமாக சவால் விடுக்கின்றோம் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“ மாகாணசபைத் தேர்தல் அல்லது ஏதேனுமொரு தேர்தலை நடத்துமாறு சவால் விடுக்கின்றோம். அப்போது மக்கள் உரிய பதிலை வழங்குவார்கள்.
எதிர்க்கட்சியாக நாம் எமது பொறுப்பை நிறைவேற்றி வருகின்றோம். எனவே, பிரதான எதிர்க்கட்சியின் நடவடிக்கை போதுமானதாக இல்லை.” எனவும் அவர் குறிப்பிட்டார்.










