இறுதிப் போட்டி நேரடி ஒளிபரப்பு:கோல்பேஸில் கோலாகலம்!

இலங்கை கால்பந்து சம்மேளனம் (FFSL), இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு, சிரச டிவி, பியோ டிவி (PeoTV) ஆகியவற்றுடன் இணைந்து, அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கு இடையிலான 2026 FIFA உலகக் கிண்ண இறுதிப் போட்டியை கொழும்பு காலிமுகத்திடலில் ஞாயிற்றுக்கிழமை (19) பிரம்மாண்டமான முறையில் திரையிட ஏற்பாடு செய்துள்ளது.

நாடு முழுவதிலுமிருந்து வருகை தரும் கால்பந்து ரசிகர்களுக்கு இந்த முக்கிய போட்டியை ஒரு பிரம்மாண்டமான திரையில் முற்றிலும் இலவசமாக நேரலையில் பார்ப்பதற்கான வாய்ப்பை இது வழங்குகிறது.

‘கால்பந்து சாம்பியன்களின் இரவு’ (Football Champions Night) என பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்வு மாலை 5:00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன், கால்பந்து, இசை, பொழுதுபோக்குகள் நிறைந்த ஒரு மாலையை அனுபவிப்பதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இங்கு திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை முழுவதிலுமிருந்து வரும் ரசிகர்களை ஒன்றிணைத்து, இந்த உலகக் கிண்ண இறுதிப் போட்டியை ஒரு பண்டிகை போன்ற உற்சாகமான சூழலில் கொண்டாடுவதே ஏற்பாட்டாளர்களின் நோக்கமாகும்.

இறுதிப் போட்டி நியூயார்க்கின் ஈஸ்ட் ரதர்ஃபோர்டில் உள்ள நியூ ஜெர்சி மைதானத்தில் ஜூலை 19, ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இலங்கை நேரப்படி இன்று நள்ளிரவு 00.30 நிமிடத்தில் போட்டி ஆரம்பமாகும்.

Related Articles

Latest Articles