ஈரான் நினைத்தால் மத்திய கிழக்கில் செல்வந்த நாடாக மாற முடியும்

ஈரான் ஆட்சியாளர்கள் நினைத்தால், மத்திய கிழக்கு பிராந்தியத்திலேயே மிகப்ப பணக்கார நாடாக ஈரானை மாற்ற முடியும் என்று அமெரிக்க ராஜாங்க செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

எனினும், தீவிரவாத மதகுருமார்களால் ஈரானில் தவறான ஆட்சி முன்னெடுக்கப்படுவதாகவும், அவர்கள் தங்களுடைய சொந்த நாட்டையே அழித்து வருகிறார்கள் எனவும் அவர் அமெரிக்க ராஜாங்க செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

“ நாட்டின் பணத்தை எடுத்து ஹிஸ்புல்லா, ஹமாஸ், ஹ_திகள் மற்றும் ஷியா ஆயுதக் குழுக்களுக்கு ஈரான் ஆட்சியாளர்கள் வழங்குகிறார்கள். உலகம் முழுவதும் பயங்கரவாதத்தை ஊக்கப்படுத்துவதற்காகவே அந்தப் பணத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

ஈரானை அணுஆயுத அற்ற நாடாக்குவதே அமெரிக்காவின் முதன்மையான நோக்கமாகும்.” எனவும் அவர் கூறியுள்ளார்.

 

Related Articles

Latest Articles