போர் உக்கிரம்: 100 டொலரை தாண்டியது கச்சா எண்ணெய் விலை!

மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் மோதல், உலகளாவிய எண்ணை விநியோகம் குறித்த அச்சத்தை மீண்டும் தூண்டியுள்ளதால், மே மாதத்திற்குப் பிறகு முதன்முறையாக மசகு எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு $100 ஐ எட்டியுள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா இராணுவத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியதை அடுத்து, உயர்ந்து வந்த உலகளாவிய மசகு எண்ணெய் விலையின் அளவுகோலான ‘ப்ரென்ட் மசகு எண்ணெய்’ (Brent crude) விலை வியாழக்கிழமையன்று 6% இற்கும் மேலாக உயர்ந்தது.

ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) தவிர்க்க சவூதி அரேபியா பயன்படுத்தி வந்த முக்கிய ஏற்றுமதி பாதையை அச்சுறுத்தும் வகையில், செங்கடலில் உள்ள எண்ணெய் டாங்கர்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து எண்ணெய் விலைகள் சட்டென உயர்ந்தன.

இரண்டாவது கடல் பாதையிலும் பாதிப்புகள் விரிவடையும் என்ற அச்சம், உலகளாவிய மசகு எண்ணெய் விலையை இந்தப் போரிலேயே மிகக் செங்குத்தான உயர்வுகளில் ஒன்றாக உயர்த்தியது.

Related Articles

Latest Articles