பதவியிழந்த முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீண்டும் தாயகம் திரும்பவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ள நிலையில் என்ற கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், பங்களாதேஷ் ஜனாதிபதி முகமது ஷஹாபுதீன் தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளார்.
2024-ஆம் ஆண்டு தனது ஆட்சிக் கவிழ்ப்பிற்கு வழிவகுத்த மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்கியதற்காக மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள ஷேக் ஹசீனா, தான் மீண்டும் பங்களாதேஷ் திரும்பவுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்த சில நாட்களிலேயே ஷஹாபுதீனின் இந்த ராஜினாமா முடிவு வெளியாகியுள்ளது.
ஆளும் ‘வங்கதேச தேசியவாதக் கட்சியின்’ (BNP) தலைவர்களிடமிருந்து ஷஹாபுதீனுக்கு ராஜினாமா செய்யக் கோரி கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வெள்ளிக்கிழமை பங்களாதேஷ் திரும்பும் நாடாளுமன்ற சபாநாயகரிடம் , ஜனாதிபதி ஷஹாபுதீன் தனது ராஜினாமா கடிதத்தைச் சமர்ப்பிப்பார் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சிகிச்சைக்காக தாய்லாந்து சென்றிருந்த சபாநாயகர் , தனது பயணத்தைச் சுருக்கிக்கொண்டு தாயகம் திரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், உடல்நலக்குறைவைச் சுட்டிக்காட்டி அதிபர் ஷஹாபுதீன் ராஜினாமா செய்யக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
2023 முதல் அதிபராகப் பொறுப்பிலிருக்கும் ஷஹாபுதீன் வெள்ளிக்கிழமை விலகுவார் என எதிர்பார்க்கப்படுவதாக அவரது செய்தித் தொடர்பாளரும் ராய்ட்டர்ஸிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.
