தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரவையில் (PCTSP), தமிழ் முற்போக்கு கூட்டணியின் (TPA) பிரதிநிதியாக, தமுகூயின் பிரதி தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வி. இராதாகிருஷ்ணன் எம்பி பெயரிடபட்டுள்ளார்.
இன்று நடைபெற்ற, தமிழ் முற்போக்கு கூட்டணியின் (TPA) தலைமை குழுவின் தீர்மானத்தின்படி, குழு கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கூட்டணியின் அரசியல் குழு (Politburo) உறுப்பினரான பரத் அருள்சாமியும், பேரவையில் கூட்டணியை பிரதிநிதித்துவதுடன் வி. இராதாகிருஷ்ணன் எம்பிக்கு துணையாக செயல்படுவார் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
