நுவரெலியா மாவட்ட 17 வயதுக்குட்பட்ட (U-17) கடினபந்து கிரிக்கெட் அணியில் உ. கஜணன் (சஞ்சய்) தெரிவாகியுள்ளார். இவர் கவிஞர் உச்சிமலை உதயா – கீதா தம்பதியினரின் புதல்வர் ஆவார்.
க/பார்கேபல் தமிழ் வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியைக் கற்ற இவர், தற்போது நு/வட்டவளை தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று வருகின்றார்.
சமீபத்தில் நடைபெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த முறையில் சித்தியடைந்துள்ள இவர், அடுத்து உயர்தரத்தில் கல்வியைத் தொடர ஆயத்தமாகி வருகின்றார்.
இச்சாதனைக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்த தந்தை கவிஞர் உச்சிமலை உதயா, பயிற்சிகளை வழங்கிய பயிற்சியாளர்கள் மற்றும் தெரிவுக்குழுவினருக்கு கஜணனின் குடும்பத்தினர் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.
