ஈட்டி எறிதல்: ருமேஷ் தரங்க இறுதிப் போட்டிக்கு தகுதி

பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் 2026-இல் ஈட்டி எறிதல் தகுதிச் சுற்றில், இலங்கையின் முன்னணி ஈட்டி எறிதல் வீரரான ருமேஷ் தரங்க 82.84 மீற்றர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்து இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.

சர்வதேச அரங்கில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ருமேஷ் தரங்கவின் இந்த வெற்றி, அவரைப் பதக்கம் வெல்லக்கூடிய முன்னணி வீரர்களில் ஒருவராக உயர்த்தியுள்ளது.

அதேவேளை, இப்போட்டியில் பங்கேற்ற மற்றொரு இலங்கை வீரரான சுமேத ரணசிங்க, குறைந்தபட்சத் தகுதி இலக்கை எட்டத் தவறியதால் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார்.

Related Articles

Latest Articles