‘செந்தமிழத்; தேன்மொழியாள்” பாடல் பாடிய ஜமுனா ராணி காலமானார்!

தென்னிந்தியத் திரையுலகத்தின் பழம்பெரும் பாடகியான ஜமுனா ராணி நேற்று (30) பெங்களூருவில் காலமானார். அவருக்கு வயது 88. அவரது இறுதிச் சடங்கு நேற்று கல்லஹள்ளி என்ற இடத்தில் நடந்தது.

தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 6000 பாடல்களுக்கு மேல் பாடியிருக்கிறார். 1938ம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் பிறந்த ஜமுனா ராணி அவரது 7வது வயதில் ‘தியாகய்யா’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் பாடகியாக நுழைந்தார்.

குழந்தைத் தனமான குரலுக்கு சொந்தக்காரரான ஜமுனா தமிழில் 1952ல் தமிழில் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தினர் தயாரிப்பில் வெளிவந்த ‘கல்யாணி’ என்ற திரைப்படத்தில் இரண்டு பாடல்கள் பாடினார். ‘சக்ஸஸ்’ என்று ஒரு பாட்டும், ‘ஒன் டூ த்ரீ என்று ஒரு பாட்டும் இவருடைய குரலில் பதிவானது.

இந்த இரண்டு பாடல்களும் இவருக்கு நல்ல பெயரையும் பெற்றுத் தந்தது. அதன்பின் ‘மகாதேவி’ திரைப்படத்தில் சாவித்ரிக்காக இவர் பின்னணி பாடிய ‘காமுகர் நெஞ்சில் நீதியில்லை’ என்ற பாடல் இவருக்கு திரையிசைப் பயணத்தில் ஒரு திருப்பத்தை தந்தது என்றே சொல்லலாம்.

சூப்பர் ஹிட் பாடல்கள்

“காளை வயசு கட்டான சைசு…, செந்தமிழ் தேன் மொழியாள்…, பாட்டொன்று கேட்டேன்…, காட்டில் மரம்…, சின்னச் சின்ன சிட்டு…, காவேரி தாயே…, உங்க மனசு ஒரு தினுசு…, தாரா தாரா வந்தாரா…, எந்த நாளும் சந்தோஷமே…, யாரடி நீ மோகினி…, குங்குமப்பூவே கொஞ்சும் புறாவே…, மாமா மாமா…, ஆசையும் என் நேசமும்…,” என அந்தக் காலத்தில் பல சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடியவர்.

மணிரத்னம் இயக்கத்தில் இளையராஜா இசையில் ‘நாயகன்’ படத்தில் இடம் பெற்ற ‘நான் சிரித்தால் தீபாவளி’ பாடலைப் பாடியவர்.

இயற்பெயர் : கே ஜமுனா ராணி

சினிமா பெயர் : கே ஜமுனா ராணி

பிறப்பு : 17-மே-1938

இறப்பு : 30, ஜூலை 2026

பிறந்த இடம் : ஆந்திர மாநிலம்

பெற்றோர் : கே வரதராஜுலு – கே திரௌபதி

விருதுகள்

* 1998ம் ஆண்டு தமிழக அரசால் ‘கலைமாமணி விருது’ வழங்கப்பட்டது. * 2002ம் ஆண்டு கவுரவ விருதான ‘அறிஞர் அண்ணாதுரை விருது’ தமிழக அரசால் வழங்கப்பட்டது.

 

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles