ஆட்டம் காணும் பீபா: முக்கிய புள்ளி ராஜினாமா

சர்வதேச கால்பந்து சம்மேளனமான பீபாவின் (FIFA) உலகக்கோப்பை மற்றும் பிற முக்கிய தொடர்களின் பங்குகளை விற்பனை செய்ய அந்த அமைப்பு முன்வைத்துள்ள திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பீபா தலைவர் ஜிஅன்னி இன்ஃபான்டினோவின் மூத்த ஆலோசகர் கார்லோஸ் கார்டிரோ (Carlos Cordeiro) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ‘FIFA பார்வர்ட் என்டர்பிரைஸ்’ (FFE) என்ற திட்டத்தின் கீழ் தனிநபர் முதலீடுகளை ஈர்ப்பதற்கான யோசனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், உடனடி அமலுக்கு வரும் வகையில் தனது ராஜினாமாவை வெள்ளிக்கிழமை அறிவித்த கார்டிரோ, இத்திட்டம் “கால்பந்து விளையாட்டுக்கு ஒரு மோசமான ஒப்பந்தம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பீபாவின் இந்தத் திட்டத்தின் படி, FFE அமைப்பானது உலகக்கோப்பை மற்றும் பிற தொடர்களை நடத்துவதற்காக 20 பில்லியன் டாலர் மதிப்பிலான துணை நிறுவனம் ஒன்றை உருவாக்கும்.

இதில் 20 சதவீதம் வரையிலான பங்குகள் வெளிப்புற முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்யப்படவுள்ளன. இதற்கு டொனால்ட் டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னரின் இளைய சகோதரரான ஜோசுவா குஷ்னர் நிதி உதவி வழங்கவுள்ளார்.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள கார்டிரோ,

“நான் ஒன்றை தெளிவாகக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்: இந்த யோசனையில் எனக்கு எந்தப் பங்கும் இல்லை, இதை நான் திட்டவட்டமாக எதிர்க்கிறேன். இது பீபாவின் உறுப்பு சங்கங்களுக்கும், கால்பந்து விளையாட்டுக்கும், இந்த விளையாட்டின் நீண்டகால எதிர்காலத்திற்கும் உகந்ததல்ல” என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் நடைபெற்ற 2026 உலகக்கோப்பைக்கான வெள்ளை மாளிகை பணிக் குழுவில் (White House Task Force) பீ பா சார்பில் கார்டிரோ பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார்.

முன்னாள் வங்கியாளரான இவர், அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பின் முன்னாள் துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். உலக அளவில் கால்பந்தை விரிவுபடுத்துவதற்காக இன்ஃபான்டினோவால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles