பொகவந்தலாவ பகுதியில் வெள்ளம்: 20 வீடுகள் பாதிப்பு

மலையகத்தில் தொடர்ந்து நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக, பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெர்க்கஸ்வோல்ட் மேல் பிரிவுத் தோட்டத்தில் 20 வீடுகள் வெள்ள நீரினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (02.08.2026) இரவு முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக, காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் ஏந்திச் செல்லும் கால்வாய் ஒன்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் இன்று (03) அதிகாலை 3.00 மணியளவில் வெள்ள நீர் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்தது.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெள்ளநீர் வடியாமல் உள்ளதாகவும், வீடுகளுக்குள் நீர் புகுந்ததால் வீட்டு உபகரணங்கள் அனைத்தும் நனைந்து சேதமடைந்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, சில குடியிருப்புகளின் பின்பகுதியில் மண்மேடுகள் சரிந்து விழுந்ததில் வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. அத்துடன், கெர்க்கஸ்வோல்ட் தோட்டப் பகுதிக்குச் செல்லும் பிரதான வீதியில் சுமார் மூன்றரை அடி உயரத்திற்கு வெள்ளநீர் நிரம்பியுள்ளதால், அவ்வீதியூடான போக்குவரத்து முழுமையாகப் பாதிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியுள்ளது.

மேலும், இந்த வெள்ளப் பெருக்கினால் பகுதியில் உள்ள கால்நடை வளர்ப்பாளர்களும் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் மக்களின் விவரங்கள் கிராம உத்தியோகத்தர் ஊடாகச் சேகரிக்கப்பட்டு, மேலதிக நடவடிக்கைகளுக்காக நோர்வுட் பிரதேச செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகப் பிரதேசத்திற்குப் பொறுப்பான கிராம உத்தியோகத்தர் தெரிவித்தார்.

– பொகவந்தலாவ நிருபர் எஸ். சதீஸ்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles