காலி ரயில்வே வீடமைப்புத் தோட்டத்திற்குச் சொந்தமான காணியில் இருந்த தென்னை மரத்தில் தேங்காய் 21 தேங்காய்களைப் பறித்த குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.
குறித்த நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், இவரை இரண்டு லட்ச ரூபா பிணையில் விடுவிக்க காலி நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
காலி வீடமைப்புத் தோட்டத்தில் உள்ள தேங்காய் மரத்தில் 21 தேங்காய்களை நேற்று மாலை பறித்த குறித்த நபர் அந்த இடத்திலேயே அதனை தோல் நீக்கி துப்பறவு செய்துள்ளார்.
இதன்போது ரயில்வே வீடமைப்பின் காவல் அதிகாரிகள் குறித்த நபரை பிடித்து காலி பொலிஸ் நிலையத்தில் தேங்காய்களுடன் ஒப்படைத்துள்ளனர்.
பொலிசார் குறித்த சந்தேக நபரை நீதிமன்றில் தாக்கல் செய்தபோது, சந்தேக நபரை இரண்டு லட்சம் ரூபா சரீர பிணையில் செல்ல நீதவான் அனுமதித்தார்.










