நுவரெலியா வலயக் கல்வி வலயத்துக்குட்பட்ட அனைத்து பாடசாலைகளும் நாளை (05) வழமைபோல் இயங்கும் என மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
மேற்படி விடயம் தொடர்பாக மத்திய மாகாண கல்விப் பணிப்பாளரின் அறிவித்தலின் படி,
நாளை 2026.08.05 அனைத்து பாடசாலைகளும் வழமை போல் நடைபெறும்.
பாடசாலையில் உள்ள மாணவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் அவசர நிலை ஏற்பட்டால், பாடசாலையை முழுமையாக மூடுவதா அல்லது பகுதியளவில் மூடுவதா என்ற தீர்மானத்தை மேற்கொள்ளும் அதிகாரம் அதிபர்களுக்கு வழங்கப்படுகின்றது.











