ஒரு நொடியில் சிதைந்த அழகான குடும்பம்: கினிகத்தேனை மண்சரிவில் தாயும் மூன்று பிள்ளைகளும் பலி

நுவரெலியா மாவட்டத்தின் கினிகத்தேனை – பொல்பிட்டிய பகுதியில் நேற்று இடம்பெற்ற துயரமான மண்சரிவு அனர்த்தத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

அப்பகுதியில் உள்ள வீடொன்றின் மீது திடீரென மண்மேடு சரிந்து விழுந்ததில், வீட்டிலிருந்தவர்கள் மண்ணுக்குள் புதையுண்டு உயிரிழந்ததாகப் பொல்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்கள்:

குசும் ரத்நாயக்க (தாய்)

ஷ்யாமா குமுதுனி ரத்நாயக்க (மூத்த மகள்)

மனேல் குமுதுனி ரத்நாயக்க (இளைய மகள்)

மஹின்ச தினேத் ரத்நாயக்க (மகன்)

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

பொகவந்தலாவ நிருபர் எஸ் சதீஸ்

Related Articles

Latest Articles