நாவலபிட்டி , பஸ்பாகே கோறல பிரதேச சபைக்கு உட்பட்ட பார்கேபல் கீழ் பிரிவு பாதையே இது.
மழைக் காலங்களில் இந்தப் பாதையின் மோசமான நிலை காரணமாக மாணவர்கள் பாடசாலைக்குச் செல்ல முடியாத அவல நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அதேபோல், தொழிலுக்காக நகர்ப்புறங்களுக்குச் செல்லும் தொழிலாளர்களின் போக்குவரத்துப் பிரச்சினையும் மக்களின் அன்றாட பிரச்சினையாக மாறியுள்ளது.
இப்பிரதேசத்தில் இருந்து காலை 06.40 மணிக்கு செல்லும் தனியார் பஸ் வண்டியில் பாடசாலை மாணவர்களும், அதிகளவான தொழிலாளர்களும் பயணிக்கின்றனர். தற்போது பாதையின் மிகவும் மோசமான நிலை காரணமாக அந்த பஸ் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது.
ஆகவே, இந்த நிலைமையை பஸ்பாகே கோறல பிரதேச சபையின் நேரடி கண்காணிப்பிலும், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாகவும் தீர்வு ஒன்றை வழங்குமாறு பிரதேச மக்கள் பணிவன்புடன் கோரிக்கை விடுக்கின்றனர்.










