அரசு மற்றும் அரசின் அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான 2026 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட முடிவுத் திகதிகளையும், இரண்டாம் கட்ட ஆரம்பத் திகதிகளையும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
சிங்கள மற்றும் தமிழ் மொழிப் பாடசாலைகளுக்கு மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் ஆகஸ்ட் 7 வெள்ளிக்கிழமையுடன் நிறைவடையும்.
முஸ்லிம் பாடசாலைகளுக்கு மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் செப்டம்பர் 2 புதன்கிழமையுடன் நிறைவடையும்.
அனைத்துப் பாடசாலைகளுக்குமான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் செப்டம்பர் 7 திங்கட்கிழமை ஆரம்பமாகும்.
அனைத்துப் பாடசாலைகளுக்குமான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் டிசம்பர் 4 வெள்ளிக்கிழமையுடன் நிறைவடையும்.
மேலும், 2026 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை (G.C.E. A/L) ஆகஸ்ட் 10 முதல் செப்டம்பர் 5 வரை நடைபெறும் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.










