மத்தள விமான நிலையத்தை இயக்க சீனா, இந்தியா, ஓமான் போட்டி

மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ள நிறுவனங்களில் சீனா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த நிறுவனங்களும் உள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள மத்தள மகிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தை (MRIA) இயக்குவதற்காக அரசாங்கம் விருப்பக் கோரிக்கைகளை (Expressions of Interest – EoI) கோரியிருந்தது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில், சீனாவிடமிருந்து பெறப்பட்ட சுமார் 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியுடன் மத்தள விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்பட்டது. இந்த விமான நிலையம் 2013ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.

விருப்பக் கோரிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி ஆரம்பத்தில் ஜூன் 8ஆம் திகதியாக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் அது மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டது.

இந்த நடைமுறையின் கீழ் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இதுவரை 19 முன்மொழிவுகள் கிடைத்துள்ளதுடன், அவை தற்போது மதிப்பீடு செய்யப்பட்டு வருகின்றன.

முதலீட்டு முன்மொழிவுகளை சமர்ப்பித்த நிறுவனங்களில் சீன மற்றும் இந்திய நிறுவனங்கள் உள்ளனவா என கேள்வி எழுப்பப்பட்டபோது, துறைமுகங்கள், விமானப் போக்குவரத்து மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க அதனை உறுதிப்படுத்தினார்.

அத்துடன், ஓமானைச் சேர்ந்த நிறுவனங்களிடமிருந்தும் முன்மொழிவுகள் கிடைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles