கொழும்பு – மாளிகாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பாதாள குழு உறுப்பினரான கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய உறவினர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மாளிகாவத்தை, சங்கராஜ மாவத்தை பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இரு இனந்தெரியாத நபர்கள், குறித்த நபரை இலக்கு வைத்துத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி பலத்த காயமடைந்த நபர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் காணவும், அவர்களைக் கைது செய்யவும் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.










