‘அஸ்வெசும’ விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க நோர்வூட் பிரதேச செயலகத்தில் திரண்ட மக்கள்

‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் அண்மையில் அம்பலமான நிலையில், புதிய ‘அஸ்வெசும’ விண்ணப்பப் படிவங்களைச் சமர்ப்பிப்பதற்காக நோர்வூட் பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று (10.08.2026) திங்கட்கிழமை காலையிலிருந்து பெருந்திரளான மக்கள் குவிந்தனர்.

நோர்வூட் பிரதேச செயலகப் பிரிவில் அஸ்வெசும திட்டப் பணிகளில் ஊழல் மற்றும் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகக் கடந்த வாரம் சர்ச்சைகள் எழுந்தன.

இதன் காரணமாக, அஸ்வெசும நிவாரணக் கொடுப்பனவிற்காக விண்ணப்பித்தும் இதுவரை கொடுப்பனவுகள் கிடைக்கப்பெறாத பயனாளிகள், தங்களது விண்ணப்பப் படிவங்களை மீண்டும் உரிய முறையில் சமர்ப்பிப்பதற்காக இன்றைய தினம் நோர்வூட் பிரதேச செயலகத்திற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பொகவந்தலாவ நிருபர் எஸ் சதீஸ்

Related Articles

Latest Articles