பண்ணை கொட்டகைகளுக்கு ரூ. 2.5 மில்லியன் காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்

காலநிலை மற்றும் பேரிடர் அபாயங்களிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கில், பசு, எருமை, ஆடு, பன்றி உள்ளிட்ட கால்கடைகளுக்காக கட்டப்படும் பண்ணைக் கொட்டகைகளை உள்ளடக்கிய ஒரு புதிய காப்பீட்டுத் திட்டத்தை விவசாய மற்றும் விவசாயக் காப்புறுதிச் சபை அறிவித்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ், வெள்ளப்பெருக்கு, புயல், மின்னல், மோதல்கள், நிலச்சரிவு மற்றும் வனவிலங்குகளால் ஏற்படும் சேதங்களுக்கு ரூ. 2.5 மில்லியன் வரை இழப்பீடு வழங்கப்படும்.

விவசாயிகள் காப்பீடு செய்யப்பட்ட தொகையில் 2.5% அடிப்படை பிரீமியமாக செலுத்த வேண்டும். தீ விபத்துகளால் ஏற்படும் சேதங்களுக்கும் இக்காப்பீட்டை விரிவாக்க மேலும் 1% கூடுதல் பிரீமியம் செலுத்தப்பட வேண்டும்.

விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தினால் நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளுக்கு ஏற்ப பராமரிக்கப்படும் பண்ணை வீடுகள் மட்டுமே இத்திட்டத்திற்கு தகுதி பெறும் என்று சபை தெரிவித்துள்ளது.

அதிகரித்து வரும் காலநிலை மற்றும் வானிலை மாற்றங்களால், கால்நடை வளர்ப்புத் துறையில் ஏற்படும் அபாயங்கள் மற்றும் நிச்சயமற்ற தன்மைகளை நிர்வகிப்பதற்கு காப்பீட்டுத் திட்டத்தைப் பெறுவது ஒரு அத்தியாவசிய நடவடிக்கையாக மாறியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த முயற்சி, கால்நடை வளர்ப்பில் செய்யப்படும் முதலீடுகளைப் பாதுகாப்பதுடன், விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான அதிக நம்பிக்கையை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Latest Articles