“நீதித்துறையின் சுயாதீனம் கேள்விக்குறியானால், இலங்கைக்குக் கிடைக்கும் ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரிச்சலுகைகூட இல்லாமல் போகக்கூடும்” என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:
“நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது என்பது தற்போதைய சூழ்நிலையில் தேவையற்ற ஒரு விடயமாகும். இது நீதித்துறையின் சுயாதீனத்தில் தலையிடும் செயலாகும். எனவே, அரசாங்கம் இதனைச் செய்யக் கூடாது எனக் கேட்டுக்கொள்கின்றோம்.
அரசாங்கம் தனது தேவைக்கேற்ப நாட்டை நிர்வகிக்கலாம்; ஆனால் நீதித்துறையில் தலையீடுகளை மேற்கொள்ள முற்படக் கூடாது. அதனை நாம் வன்மையாக எதிர்க்கின்றோம். இதற்கு ஐக்கிய நாடுகள் சபையும் (UN) தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இவ்வாறான செயற்பாடுகளால் எதிர்காலத்தில் நாட்டின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகைகூட இரத்து செய்யப்படக்கூடிய அபாயம் உள்ளது.
எனவே, அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தைத் தோற்கடிப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம்,” என்று அவர் கூறினார்.










