நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று 18ஆம் திகதி நண்பகல் 12 மணியளவில், ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் குடாகம பகுதியில், மயானத்திற்கு முன்னால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹட்டன் பகுதியிலிருந்து குடாகம பகுதியை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று, குடாகம பகுதிக்குள் திரும்புவதற்காக பிரதான வீதியின் குறுக்கே சென்றபோது, எதிர்திசையில் ஹட்டன் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களும் காயமடைந்துள்ளனர். காயமடைந்த இருவரும் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் மோட்டார் சைக்கிளும் சேதமடைந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மலைவாஞ்ஞன்
