பதுளை, ஹல்துமுல்ல பிரதேச செயலகத்திற்குட்பட்ட கபரகல பகுதியில் மலையக மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட 50 புதிய வீடுகள் எதிர்வரும் 28 ஆம் திகதி பயனாளிகளிடம் கையளிக்கப்படவுள்ளன.
இந்நிகழ்வில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு, மக்களுக்கான வீடுகளை உத்தியோகபூர்வமாகக் கையளிப்பார் என அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.
இது குறித்து மேலும் தெரிவித்த அமைச்சர்,
“கடந்த 2023 ஆம் ஆண்டு கபரகல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்கள், அப்பகுதியிலுள்ள தேயிலைத் தொழிற்சாலையில் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
சுமார் 3 ஆண்டுகளாகத் தற்காலிக முகாம்களில் வாழ்ந்து வந்த இம்மாக்களுக்காகவே தற்போது வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.
இலங்கை அரசாங்கத்தின் நிதி உதவியுடன், இராணுவத்தின் பங்களிப்போடு இந்த 50 வீடுகளின் நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன” எனக் குறிப்பிட்டார்.










