“அரசமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலத்தைவிட, மக்களுக்காக இந்த அரசாங்கம் பல விடயங்களை செய்ய வேண்டியுள்ளது. அவற்றை செய்துமுடித்துவிட்டு, எந்தவொரு திருத்தத்தையும் கொண்டுவரலாம்.” – என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
மக்கள் உண்பதற்குகூட வழியின்றி கவலைப்படுகின்றனர். இந்த பிரச்சினைக்கு தீர்வை தேடாமல், தேவையற்ற பிரச்சினையை தீர்க்கப்போனால்தான் பிரச்சினை ஏற்படும் எனவும் அவர் கூறினார்.
