திருகோணமலையிலுள்ள கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் (Naval and Maritime Academy) கிழக்கு கடற்படை கட்டளையைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார அனுபவப் பகிர்வுடனான சிறப்புப் பயிலரங்கு ஒன்றை நடத்தியுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 23 ஆம் திகதி நடைபெற்ற இந்நிகழ்வில், குமார் சங்கக்கார தனது விளையாட்டு வாழ்வின் அனுபவங்கள், தலைமைத்துவப் பண்புகள் மற்றும் அதுசார்ந்த முக்கிய நுண்ணறிவுகளைக் கடற்படை அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்டார்.
பங்கேற்பாளர்கள் அவரது நீண்டகால அனுபவங்கள் மற்றும் தலைமைத்துவப் பயணத்திலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்வதற்கான ஒரு வாய்ப்பாக இந்நிகழ்வு அமைந்தது.
இந்நிகழ்வில் இலங்கை கடற்படைக் தளபதி வைஸ் அட்மிரல் டாமியன் பெர்னாண்டோவும் (Vice Admiral Damian Fernando) கலந்துகொண்டார்.
இலங்கையின் தலைசிறந்த முன்னாள் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான குமார் சங்கக்கார, சர்வதேசப் போட்டிகளில் இலங்கை அணியின் தலைவராகச் செயற்பட்டுள்ளாரென்பதுடன், ஓய்வுக்குப் பின்னரும் துடுப்பாட்டம் மற்றும் தலைமைத்துவ வளர்ச்சி சார்ந்த பல்வேறு திட்டங்களில் தொடர்ச்சியாக ஈடுப்பட்டு வருகிறார்.










