குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர் ரொசான் அமரசிங்க, நியமிக்கப்பட்டுள்ளார்.
பணித் தேவைகளைக் கருத்தில் கொண்டு, பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தல்களின் பேரில் இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
முன்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக பணியாற்றிய ஷானி அபேசேகர, பிரதிபொலிஸ்மா அதிபராக பதவிக்கு பதவி உயர்வு பெற்றதைத் தொடர்ந்தே, அந்த வெற்றிடத்திற்கு, ரொசான் அமரசிங்க, நியமிக்கப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு ரொசான் அமரசிங்க தலைமைத்துவம் வகிக்கும் நிலையில், ஷானி அபேசேகர குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குப் பொறுப்பான பொலிஸ்மா அதிபராகத் தொடர்ந்து செயல்படுவார் என்றும்பொலிஸ் தெரிவித்துள்ளது.
