உயர்நீதிமன்றம் உத்தரவிட்டால் சர்வஜன வாக்கெடுப்புக்கு அரசு தயார்

அரசியலமைப்பின் 22-ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பாகச் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தால், அதனை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராகவே உள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:

“அரசியலமைப்பின் 22-ஆவது திருத்தச்சட்டமூலத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைகள் நிறைவடைந்ததையடுத்து, உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் (தீர்ப்பு) மூன்று வாரங்களுக்குள் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்படும்.

உயர்நீதிமன்றம் வழங்கும் வழிகாட்டல்களுக்கு அமையச் செயல்பட அரசாங்கம் முழுமையாகத் தயாராக உள்ளது. சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டிய எந்தவொரு சரத்திலும் அரசாங்கம் மாற்றம் செய்யவில்லை. எனவே, சர்வஜன வாக்கெடுப்புக்கான சூழல் உருவாகாது என்றே நாங்கள் நம்புகின்றோம்.

எனினும், ஒருவேளை சர்வஜன வாக்கெடுப்பு அவசியமானது என உயர்நீதிமன்றம் கருதினால், அதனை நடத்துவதற்கும் அரசாங்கம் தயக்கமின்றித் தயாராகவே உள்ளது.”என்றார் நளிந்த ஜயதிஸ்ஸ .

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles