கருப்பு பொருளாதாரத்துக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது

இலங்கையில் மிகவும் கஷ்டப்பட்டு உழைக்கும் டொலர்களைத் திருட்டுத்தனமாக வெளிநாடுகளுக்குக் கடத்தும் கருப்புப் பொருளாதாரம் ஒன்று இருந்தது. நாம் இதுவரை சில வங்கி அதிகாரிகளையும் குற்றங்களுடன் தொடர்புடைய சிலரையும் கைது செய்துள்ளோம்.

அவர்கள் திருட்டுத்தனமாகக் கடத்தியுள்ள தொகையானது சுமார் ஒரு பில்லியன் டொலர்களாகும். ஒரு பில்லியன் டொலர் என்பது நமது நாட்டின் ஒட்டுமொத்த தேயிலை ஏற்றுமதியிலிருந்து கிடைக்கும் தொகைக்கு சமமான தொகையாகும் – என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாரநாயக்க தெரிவித்தார்.

புலத்சிங்களவில் நடைபெற்ற மக்கள் பேரணியில் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.

” இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக பணபலம், ஊடகபலம் அல்லது அரசியல் பலம் எதுவுமின்றி, இந்நாட்டின் சாதாரண பொதுமக்கள் முன்னால் வந்து தங்களது மக்கள் பலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி இந்த மக்கள் ஆதரவை கொண்ட அரசாங்கத்தை அமைத்தார்கள். இந்த அரசாங்கத்தைப் பதவியில் அமர்த்தியதும் மக்கள்தான், இந்த அரசாங்கத்தை முன்னோக்கிப் கொண்டுசெல்வதும் மக்கள்தான், இந்த அரசாங்கத்தைப் பாதுகாப்பதும் மக்கள்தான்.

மக்கள் ஏன் இப்படி ஒரு தீர்மானத்தை எடுத்தார்கள்? நீண்டகாலமாக நமது நாட்டை ஆட்சி செய்த ஆட்சியாளர்கள், ஒரு நாட்டிற்கு வரக்கூடிய அனைத்துவிதமான அழிவுகளையும் செய்திருந்தன. எந்தவொரு விடயமும் எஞ்சியிருக்காத அளவிற்கு ஒட்டுமொத்த கட்டமைப்பும் சீரழிக்கப்பட்டிருந்தது. இறுதியில் மக்கள் வீதியில் இறங்கினார்கள், கோசமெழுப்பத் தொடங்கினார்கள், ஆட்சியாளர்கள் நாட்டை விட்டு ஓடவேண்டிய நிலை ஏற்பட்டது. இலங்கையில் அப்படியொரு வரலாறு இருந்ததில்லை, மக்கள் வீதியில் இறங்கி ஆட்சியாளர்களை விரட்டியடித்தார்கள்.

அதனால் இந்நாட்டு மக்கள், தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரத்தை வழங்கி இந்த ஒட்டுமொத்த அழிவையும் மாற்றி, நாட்டைச் சரியான மற்றும் நல்ல திசையில் திருப்ப வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள். அவர்கள் சுயநலப் பயன்களை எதிர்பார்த்து வரவில்லை. நமது பிள்ளைகளுக்கு இதைவிடச் சிறந்ததொரு நாட்டை, இதைவிடச் சிறந்ததொரு எதிர்காலத்தை தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் மூலம் உருவாக்கிக் கொடுப்பதையே அனைவரும் எதிர்பார்த்தார்கள்.

இந்த நாடு முற்றாகவே ஒரு ‘கருப்பு அரசாகவே’ காணப்பட்டது. அரசியல் ஒரு கருப்பு அரசியலாக, பொருளாதாரம் ஒரு கருப்புப் பொருளாதாரமாக, சட்டமும் நிறைவேற்று அதிகாரமும் வழிகெட்ட ஒரு கருப்புச் சட்டமாக மாறியிருந்தது. சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களிடையே மோதல்களை ஏற்படுத்தும் இனவாத முழக்கங்கள் எங்கும் பரவியிருந்தன.

உலகிற்கு முன்னால் நமது நாடு வங்குரோத்து அடைந்து, ஊழல் நிறைந்த ஒரு கருப்பு நாடாகவே சித்தரிக்கப்பட்டிருந்தது. ஒரு குழந்தைக்குப் பாதுகாப்பற்ற, எதிர்காலம் குறித்த நம்பிக்கையற்ற, சட்டத்தின் மீது நம்பிக்கையற்ற ஒரு பெரிய கருப்பு அரசு நமது நாட்டில் உருவாகியிருந்தது.

இந்தச் சீர்கேடான கருப்பு அரசை முற்றாகத் தூய்மைப்படுத்தி, எதிர்காலச் சந்ததியினருக்கு நல்லதொரு நாட்டை உருவாக்கிக் கொடுப்பதற்காகவே
மக்கள் இந்த ஆட்சியை உருவாக்கினார்கள். தேசிய மக்கள் சக்தி இந்தச் சீர்கேடான அரசை வேரோடு பிடுங்கியெறியும் என்ற உறுதியை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.

நிறுவப்பட்டிருந்த இந்தச் சீர்கேடான அரசு அசையத் தொடங்கும் போது, அந்த சீர்கேடான கட்டமைப்பில் அடைக்கலம் பெற்றவர்கள், பாதுகாப்புப் பெற்றவர்கள், சலுகைகளைப் பெற்றவர்கள் இப்போது கடுமையாகப் பதற்றமடைந்துள்ளார்கள். அவர்கள் பதற்றமடைந்து, இப்போது இந்த அரசாங்கத்தை விரட்ட வேண்டும் என்று கூறுகிறார்கள். இவர்கள்தான் அந்த பழைய சீர்கேடான கட்டமைப்பில் அடைக்கலம் பெற்று, சலுகைகளை அனுபவித்த குழுவினர்.

யார் பதற்றமடைந்தாலும், தேசிய மக்கள் சக்தியின் நமது அரசாங்கம் எவ்வித பதற்றமும் அடையாது என உங்களுக்கு ஒரு உறுதிமொழியைத் தருகிறேன்.

நம்மிடம் நிறைவேற்று ஜனாதிபதி பதவியின் மாபெரும் அதிகாரம் உள்ளது, பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் உள்ளது, பிரதேச சபைகள் மற்றும் நகர சபைகளில் மாபெரும் பலம் உள்ளது. ஆனால், நமது முதன்மையான பலமாக நாம் கருதுவது நிறைவேற்று அதிகாரத்தையோ அல்லது பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையையோ அல்ல. நாம் மக்கள் மீது மட்டுமே நம்பிக்கை வைத்துள்ளோம்.

இதற்கு முன்னர் இருந்த ஆட்சியாளர்களிடமும் நிறைவேற்று அதிகாரம் இருந்தது, மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்தது, அண்ணன் ஜனாதிபதியாக, இன்னொரு அண்ணன் பிரதமராக, மற்றொரு அண்ணன் நிதியமைச்சராக, இன்னொரு அண்ணன் சபாநாயகராக என ஒட்டுமொத்த குடும்பமுமே அதிகாரத்தில் இருந்தது.

ஆனால் இறுதியில் அவர்கள் நாட்டை விட்டு ஓடவேண்டிய நிலைதான் ஏற்பட்டது. எனவே, நமது அதிகாரத்தின் ரகசியம் மக்களின் பலத்தில் மட்டுமே உள்ளது. அந்த மக்கள் பலத்தை மேலும் வலுப்படுத்தவே நாம் மக்களுக்கு தெளிவுபடுத்த வந்துள்ளோம்.

இந்த சீர்கேடான கட்டமைப்பின் பொருளாதாரத்திற்குள் இருந்த பெருமளவிலான ஊழல்களை நாம் நிறுத்தத் தொடங்கினோம்.

இலங்கையில் மிகவும் கஷ்டப்பட்டு உழைக்கும் டொலர்களைத் திருட்டுத்தனமாக வெளிநாடுகளுக்குக் கடத்தும் கருப்புப் பொருளாதாரம் ஒன்று இருந்தது. நாம் இதுவரை சில வங்கி அதிகாரிகளையும் குற்றங்களுடன் தொடர்புடைய சிலரையும் கைது செய்துள்ளோம்.

அவர்கள் திருட்டுத்தனமாகக் கடத்தியுள்ள தொகையானது சுமார் ஒரு பில்லியன் டொலர்களாகும். ஒரு பில்லியன் டொலர் என்பது நமது நாட்டின் ஒட்டுமொத்த தேயிலை ஏற்றுமதியிலிருந்து கிடைக்கும் தொகைக்கு சமமான தொகையாகும்.

நமது குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் சுங்கத் திணைக்களமும் தலையிட்டு, டொலர்களைக் கருப்புப் பொருளாதாரத்திற்குள் கடத்துவதை முற்றாக நிறுத்தியுள்ளன.

இதற்கு முன்னர் அரசாங்கத்தின் வரிப் பணம், காணி குத்தகைகள் மூலம் கிடைக்கும் பணம் போன்ற திறைசேரிக்கு வர வேண்டிய செல்வங்கள் உரிய இடத்தை போய்ச் சேரவில்லை. அவை திறைசேரிக்கு வருவதற்கு முன் வேறு வேறு வழிகளில் அவர்களின் வீடுகளுக்குச் சென்றன.

திறைசேரிக்கு வந்த பிறகும் மற்றொரு பகுதி வீடுகளுக்குச் சென்றது. அதனால் திறைசேரி காலியானது. திறைசேரிக்கு வர வேண்டிய ஒவ்வொரு சதமும் வேறு வழிகளில் செல்வதை நாம் நிறுத்தி, அந்தத் திருட்டு வழிகள் அனைத்தையும் அடைத்துத் திறைசேரியை வலுப்படுத்தினோம்.

இதன் விளைவாக, 30 ஆண்டுகளுக்குப் பிறகு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16.7% என்ற மிகஉயர்ந்த அரச வருமானத்தை 2025ஆம் ஆண்டில் எம்மால் பெற முடிந்தது.

அதேபோன்று, திறைசேரிக்கு வரும் செல்வத்தை நாம் மிகவும் கவனமாகக் கையாள்கிறோம். முன்னர் எவ்வித சாத்தியக்கூறு ஆய்வுகளுமின்றி, ஒப்பந்தக்காரர்களுக்கு ஒப்பந்தங்களை வழங்கி, நினைத்தால் ஒரு துறைமுகம், ஒரு விமான நிலையத்தைக் கட்டி மக்களின் செல்வத்தை வீணடித்தார்கள்.

நாம் அவற்றை நிறுத்திப் பணத்தைக் கவனமாகச் செலவிட்டதால், வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையைப் பெருமளவில் குறைக்க முடிந்தது. 1957ஆம் ஆண்டிற்குப் பிறகு இலங்கையில் பதிவான மிகக் குறைந்த வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையை 2025ஆம் ஆண்டில் எம்மால் பதிவு செய்ய முடிந்தது. கருப்புப் பொருளாதாரத்தைச் சுத்தப்படுத்தும்போதுதான் இந்த நன்மைகள் மக்களைச் சென்றடைகின்றன.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles