காலாவதியான கிரீம் பனிஸ் விற்பனை: ரூ.200,000 அபராதம்!

நுகர்வோருக்குகாலாவதியான பேக்கரி உணவுப் பொருட்களை விற்பனை செய்தமை தொடர்பாக, கொழும்பு 13, செயிண்ட் பெனடிக்ட் மாவத்தையில் அமைந்துள்ள Perera and Sons Bakers Pvt Ltd நிறுவனத்திற்கு எதிராக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் விசாரணை அதிகாரிகளால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

2026 ஏப்ரல் 20 அன்று குறித்த விற்பனை நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது, 2026/04/16 என காலாவதி தேதி குறிப்பிடப்பட்டிருந்த ஸ்ட்ரோபெரி சுவையுடைய கிரீம் பன்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
2026 செப்டம்பர் 09 அன்று இந்த வழக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் (இலக்கம் 05) முன் அழைக்கப்பட்டபோது, பிரதிவாதி நிறுவனம் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டது.

அதன்படி கௌரவ நீதிமன்றம் குறித்த நிறுவனத்திற்கு ரூ. 200,000/- அபராதம் விதித்தது.

📢 நுகர்வோருக்கு முக்கிய அறிவுரை 

உணவுப் பொருட்களை வாங்கும் போது உற்பத்தித் தேதி மற்றும் காலாவதி தேதியை எப்போதும் சரிபார்க்கவும். காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் விற்பனை நிலையங்கள் தொடர்பான தகவல்கள் இருந்தால், அலுவலக நேரங்களில் 1977 என்ற குறுந்தொலைபேசி இலக்கத்தின் மூலம் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு உடனடியாக அறிவிக்கவும்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles