புசல்லாவை, சங்குவாரி தோட்டத்திலும் தோட்டத் தொழிலாளி ஒருவர் இன்று (17) பாம்புக் கடிக்கு இலக்காகியுள்ளார்.
55 வயதான செல்லமுத்து சுப்ரமணியம் என்பவரே இவ்வாறு பாம்புக் கடிக்கு இலக்கானார் எனவும், அவர் கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவருவதாகவும் தெரியவருகின்றது.
இன்று முற்பகல் 11.30 மணியளவிலேயே தேயிலை தோட்டத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அதேவேளை, புசல்லாவை கலுகல்ல தோட்டத்திலும் இன்று தோட்டத் தொழிலாளியொருவர் பாம்புக் கடிக்கு இலக்கானார் என்பது குறிப்பிடத்தக்கது.










