“மலையக மக்களுக்கான வீடுகள், போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீடுகள், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான வீடுகள் , டித்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீடுகள் என இவ்வருடம் 60 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்படும்.” என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
டித்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 25 ஆயிரம் வீடுகள், ஏனைய திட்டங்களின்கீழு; 35 ஆயிரம் வீடுகள் என 60 ஆயிரம் பேருக்கு வீடுகள் கிடைக்கப்பெற உள்ளன. இது பற்றி மகிழ்ச்சியடைய வேண்டியதில்லையா?
வீடுகள் அமைக்கும் வேலைத்திட்டம் அடுத்த வருடம் மேலும் விரிவுபடுத்தப்படும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெலிகமவில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.










