சீன ஜனாதிபதிக்கு அமெரிக்காவில் சிவப்பு கம்பள வரவேற்பு:முடிவுக்கு வருமா வர்த்தகப் போர்?

அமெரிக்கா – சீனா இடையே வர்த்தகம், தொழில்நுட்பம், தைவான் மற்றும் ஈரான் தொடர்பான பதற்றங்கள் நிலவி வரும் சூழலில், வாஷிங்டனுக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டுள்ள சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (24) வரவேற்றார்.

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளில் அமெரிக்காவிற்கு ஷி மேற்கொள்ளும் இந்த முதல் பயணம் பெரிய அளவிலான திருப்புமுனைகளைத் தராது என எதிர்பார்க்கப்பட்டாலும், வாஷிங்டனும் பெய்ஜிங்கும் தங்கள் 11 மாதகால வர்த்தக போர் நிறுத்தத்தை மேலும் நீட்டிக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது.

இந்த விஜயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், மேரிலாந்தில் உள்ள ஆண்ட்ரூஸ் கூட்டு விமானப் படைத்தளத்தில் (Joint Base Andrews) தரையிறங்கிய ஷி ஜின்பிங்கை ட்ரம்ப் நேரில் சென்று வரவேற்றார்.

இந்த நீட்டிப்பு குறித்து இருநாடுகளும் உடன்பாட்டை எட்டியுள்ளதாக அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட் (Scott Bessent) தெரிவித்துள்ளார். இருப்பினும், இது குறித்து வாஷிங்டனில் உள்ள சீனத் தூதரகம் உடனடி கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.

வரவேற்பு நிகழ்வின் போது, தலைவர்களும் அவர்களது மனைவிகளும் கை குலுக்கி, சில நிமிடங்கள் கலந்துரையாடியதுடன் புகைப்படங்களுக்கும் தோற்றமளித்தனர்.

அப்போது இராணுவ இசைக்குழுவின் இசை, பீரங்கி முழக்கங்கள் மற்றும் பி-1 (B-1) ரகப் போர் விமானத்தின் வான்வெளிப் பறப்பியல் மரியாதையும் வழங்கப்பட்டது.

சி-ஸ்பான் (C-SPAN) ஊடகத் தகவலின்படி, அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் ஆண்ட்ரூஸ் கூட்டுப் படைத்தளத்திற்கு நேரில் சென்று ஒரு வெளிநாட்டுத் தலைவரை வரவேற்பது கடந்த 11 ஆண்டுகளில் இதுவே முதன்முறையாகும்.

இதற்கு முன்னர், 2015ஆம் ஆண்டு பராக் ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது திருத்தந்தை பிரான்சிஸை இவ்வாறு நேரில் சென்று வரவேற்றிருந்தார்.

சீனத் தூதரகத்தால் வெளியிடப்பட்ட எ அறிக்கையில், “சீனாவும் அமெரிக்காவும் கூட்டாளிகளாக இருக்க வேண்டுமே தவிர, போட்டியாளர்களாக அல்ல” என்று ஷி ஜின்பிங் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அதில் வர்த்தக ஒப்பந்தம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளுக்கு இடையே 2025ஆம் ஆண்டு உருவான சுங்கவரிப் போரினால் உலகச் சந்தை பெரும் பாதிப்பைச் சந்தித்தது.
தற்போதைய ஒப்பந்தம் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குட்பட்டதாக இருந்தாலும், சந்தை ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க இது உதவும் எனக் கருதப்படுகிறது.

ஈரானுடனான போரினால் அமெரிக்க மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வரும் ஒரு கடினமான சூழலில் ட்ரம்ப் இந்தச் சந்திப்பை எதிர்கொள்கிறார்.

மறுபுறம், உள்நாட்டுச் சவால்கள் இருந்தபோதிலும் நாட்டின் வர்த்தகப் பொருளாதாரம் வலுவாக உள்ளதால், ஷி ஜின்பிங் ஒப்பீட்டளவில் பலமான நிலையிலேயே வருகை தந்துள்ளார்.

இவ்வ ஆண்டின் இறுதியில், சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய-பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டிலோ அல்லது டிசம்பரில் அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஜி20 (G20) மாநாட்டிலோ ட்ரம்ப் – ஷி ஜின்பிங் இடையிலான மற்றொரு சந்திப்பு நிகழக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles