மக்கள் சேவகன், மக்கன் நாயகன் என அனைவராலும் போற்றப்பட்ட மறைந்த இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெருமவின் மனைவி நேற்று (25) காலமானார். அவரது இறுதிக்கிரியைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை (27) மத்துகமவில் உள்ள தகனசாலையில் நடைபெறும் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
களுத்துறை மாவட்டம் மத்துவ பகுதியை சேர்ந்த பாலித தெவரப்பெரும, மக்கள் சேவைமூலம் உலகறியப்பட்டவர்.
மக்களுக்கு ஏதேனும் பிரச்சினை என்றால் களத்தில் உடன் நிற்பவர்.
கொரோனா பெருந்தொற்று காலப்பகுதியில் தனது உயிரை பணயம் வைத்து மக்கள் சேவை செய்தவர்.
களுத்துறை மாவட்டத்தில் வாழும் மலையக மக்களின் குரலாகவும் ஒலித்தார்.
அவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருந்தார். இந்நிலையிலேயே அவரது பாரியாரும் உயிரிழந்துள்ளார்.
