ஆசிய விளையாட்டுப் போட்டி: 11 வயதில் தங்கம் வென்ற ஜப்பான் சிறுவன்

ஆசிய விளையாட்டுப் போட்டியில், தன்னை விட மூன்று மடங்கு அதிக வயதுடைய மூத்த வீரர்களைத் தோற்கடித்துத் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் ஜப்பானை சேர்ந்த 11 வயதான இ-ஸ்போர்ட்ஸ் (e-sports) வீரன் யுகி குரிஹாரா (Yuki Kurihara).

Aichi-Nagoya வில் நடைபெற்றுவரும் இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் மிகக் குறைந்த வயதுடைய போட்டியாளராகக் கருதப்படும் ண்ணாடி அணிந்த ஆரம்பப் பள்ளி மாணவர், ‘புயோ புயோ சாம்பியன்ஸ்’ (Puyo Puyo Champions) இறுதிப் போட்டியில் 10-2 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றார்.

இதன் மூலம் ஆசிய விளையாட்டு வரலாற்றில் தங்கம் வென்ற ஜப்பானின் மிக இளைய விளையாட்டு வீரர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.

திரையில் வரும் வண்ணப் பந்துகளை வரிசைப்படுத்தி வெடிக்கச் செய்யும் புதிர் விளையாட்டு தான் இந்த ‘புயோ புயோ சாம்பியன்ஸ்’. போட்டி முழுவதும் எவ்வித பதற்றமும் இன்றி அமைதியாகக் காணப்பட்ட குரிஹாரா, தொடர் வெற்றிகளைக் குவித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

முன்னதாக நடைபெற்ற அரை இறுதிப் போட்டியில், தாய்லாந்தின் 28 வயது மூத்த வீரரான தனராக் வோங்கிட்குனை (Tanarak Wongkitkun) 10-1 என்ற கணக்கில் வீழ்த்திப் பதக்கத்தை உறுதி செய்தார்.

இறுதிப் போட்டியில் தென்கொரியாவின் 24 வயது வீரர் காங் டோங்ஷினை (Kang Dongshin) வீழ்த்திய பிறகும் அவர் புன்னகைக்கக்கூட இல்லை.

“உண்மையைச் சொல்லப்போனால், நான் கொஞ்சம் வெட்கப்பட்டேன்; அதனால் தான் எனது முகத்தில் அதிக உணர்ச்சிகளைக் காட்டவோ, முகபாவனைகளை மாற்றவோ முடியவில்லை” என்று அவர் விளக்கியுள்ளார்.

பதக்க மேடையில் நின்று தங்கப் பதக்கத்தைப் பெற்றுக்கொண்ட அவர், சிறிதாகத் தலைவணங்கி அரங்கத்திலிருந்த ரசிகர்களை நோக்கி லேசாகக் கையசைத்தார்.

வெற்றி குறித்துப் பேசிய குரிஹாரா, “நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்தத் தங்கப் பதக்கம் மிகவும் அழகாகவும், பளபளப்பாகவும், கனமாகவும் இருக்கிறது. மேலும், பரிசாகக் கிடைத்த பொம்மை மிகவும் அழகாக இருக்கிறது; அதுவும் தங்க நிறத்தில் இருப்பது சிறப்பாக உள்ளது” என்று கூறினார்.

தனது முதலாம் வகுப்பில் புயோ புயோ விளையாடத் தொடங்கிய குரிஹாரா, விரைவில் பல தொடர்களில் பங்கேற்று வெற்றி பெறத் தொடங்கினார்.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொழில்முறை உரிமம் (pro licence) பெற்ற அவர், வழக்கமாகத் தன்னை விட மூத்த வீரர்களையே தோற்கடித்து வருகிறார்.

“பள்ளிப் படிப்பு, பயிற்சி வகுப்புகள் ஆகியவற்றுடன் இதையும் சமநிலைப்படுத்துவது கடினமாக இருந்தாலும், இது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது” என்று போட்டிக்கு முன்னதாக அவர் கூறியிருந்தார்.

1951-ஆம் ஆண்டு தொடங்கிய ஆசிய விளையாட்டு வரலாற்றில் மிக இளைய பதக்கம் வென்றவர்கள் பற்றிய அதிகாரப்பூர்வப் பதிவுகள் எதுவும் பொதுவெளியில் இல்லை. இருப்பினும், 2018-ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற போட்டியில் இந்தோனேசியாவின் புங்கா நைமாஸ் (Bunga Nyimas) தனது 12-வது வயதில் ஸ்கேட்போர்டிங் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.

மேலும், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஹாங்சோவில் நடந்த போட்டியில் சீனாவின் சுய் சென்சி (Cui Chenxi) தனது 13-வது வயதில் மகளிர் தெருவோர ஸ்கேட்போர்டிங் (street skateboarding) பிரிவில் தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles