“மன்னிப்புகோரும் நிலைக்கு நாங்கம் இறங்கிவந்துவிடுவோம் என அரசாங்கம் கருதுகின்றது. அவ்வாறு செய்வதற்குரிய எவ்வித தேவைப்பாடு எமக்கு கிடையாது. மக்களுடன்தான் எமது அரசியல் ஒப்பந்தம் உள்ளது. அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்வதற்குரிய எந்த தேவையும் இல்லை.
இந்த அரசாங்கம் பெயில். அதனால்தான் நாடு முழுவதும் கூட்டங்களை நடத்திவருகின்றனர். போலி குற்றச்சாட்டுகள்மூலம் ராஜபக்சக்கள் ஒடுக்கிவிட முடியாது. சவால்களை எதிர்கொள்ளும் வல்லமை அவர்களுக்கு உள்ளது.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர், முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.










