ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரே நாளில் 6 சதங்கள் குவிப்பு

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரே நாளில் ஆறு சதங்கள் பதிவாகி உள்ளன. இந்தப் பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் பவுமா, டேவிட் மில்லர், இங்கிலாந்தின் பேன்டன், மேற்கு இந்தியத் தீவுகளின் கிரீவ்ஸ், இந்தியாவின் ஷுப்மன் கில் மற்றும் விராட் கோலி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

இந்த ஆறு சதங்களும் செப்.27, 2026 (நேற்று) நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பதிவு செய்யப்பட்டது. இதற்கு முன்பு ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரே நாளில் ஐந்து சதங்கள் ஆறு முறை பதிவு செய்யப்பட்டுள்ளதாக கிரிக்கெட் தரவுகளில் தகவல்.

இங்கிலாந்து vs இலங்கை

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடுகிறது. இதில் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் கடைசி ஆட்டம் நேற்று லண்டனில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 355 ரன்கள் சேர்த்தது.

இதில் இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் டாம் பேன்டன், 105 பந்துகளில் 126 ரன்கள் சேர்த்தார். அவரது இன்னிங்ஸில் 16 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். இது ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் பதிவு செய்த முதல் சதம்.

தொடர்ந்து 356 ரன்கள் இலக்கை விரட்டிய இலங்கை, 132 ரன்களில் ஆட்டமிழந்தது. இதன் மூலம் தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து வென்றது.

தென் ஆப்பிரிக்கா vs ஆஸ்திரேலியா

அடுத்த ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியாவில் நடைபெற உள்ளது. இந்த சூழலில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்க அணி உடன் தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.

இந்நிலையில், நேற்று (செப்.27) ஜோகன்னஸ்பர்க் நகரில் இந்த தொடரின் இரண்டாவது ஆட்டம் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 365 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் கேப்டன் தெம்பா பவுமா, 116 பந்துகளில் 103 ரன்கள் சேர்த்தார்.

அவருடன் இணைந்த டேவிட் மில்லர், 93 பந்துகளில் 142 ரன்கள் எடுத்தார். பவுமாவின் நிதானமும், மில்லரின் அதிரடியும் தென் ஆப்பிரிக்க அணிக்கு இந்த ஆட்டத்தில் பலம் சேர்த்தது. இருவரும் 4-வது விக்கெட்டுக்கு 156 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

366 ரன்கள் இலக்கை விரட்டிய நடப்பு உலக சாம்பியனான ஆஸ்திரேலியா 49.5 ஓவர்களில் 333 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மார்ஷ், 84, ஹெட் 84 மற்றும் சேவியர் பார்ட்லெட் 50 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் தொடரை 2-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றி உள்ளது. இந்த தொடரில் மூன்றாவது மற்றும் கடைசி ஆட்டம் வரும் 30-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்தியா vs மேற்கு இந்தியத் தீவுகள்

மேற்கு இந்தியத் தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடி வருகிறது. இந்த சுற்று பயணத்தில் 3 ஒருநாள் மற்றும் 5 டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியாவுடன் அந்த அணி விளையாடுகிறது.

இந்த தொடரின் முதல் ஆட்டம் நேற்று (செப்.27) திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 295 ரன்கள் எடுத்தது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜஸ்டின் கிரீவ்ஸ், 108 பந்துகளில் 101 ரன்கள் எடுத்தார். அவரது ஆட்டத்தில் 12 பவுண்டரிகள் அடங்கும். முதல் விக்கெட்டுக்கு கேம்பெல் உடன் இணைந்து 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். கேம்பெல் 62, ஜாங்கோ 58 ரன்கள் சேர்த்தனர். மேற்கு இந்தியத் தீவுகள் அணி 300+ ரன்களை கடக்கும் சூழலை குல்தீப் யாதவ் தனது அபார பந்து வீச்சு மூலம் தடுத்தார்.

296 ரன்கள் விரட்டிய இந்திய அணிக்கு கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் விராட் கோலியின் ஆட்டம் வெற்றி பெற உதவியது. இருவரும் இணைந்து 2-வது விக்கெட்டுக்கு 151 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். கில், 108 பந்துகளில் 110 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

விராட் கோலி, 88 பந்துகளில் 139 ரன்கள் சேர்த்தார். சர்வதேச டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற பின்னர் ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது ஆட்டம் வேற லெவலில் உள்ளது. இது கோலியின் புது வெர்ஷன் என்று சொல்லலாம். இந்த ஆட்டத்தில் 9 சிக்ஸர்களை கோலி விளாசினார். இது ஒருநாள் கிரிக்கெட்டின் ஒரே இன்னிங்ஸில் அவர் விளாசிய அதிகபட்ச சிக்ஸர்களாகும்.

மேலும், ஒருநாள் கிரிக்கெட்டில் 15,000 ரன்களை கடந்து சச்சின் டெண்டுல்கர் உடன் இணைந்தது, ஒருநாள் கிரிக்கெட் ரன் விரட்டலில் 112-வது வெற்றியில் கோலி பங்களித்தது, 74 பந்துகளில் சதம் விளாசி கவனம் ஈர்த்தது உள்ளிட்டவை இந்த ஆட்டத்தில் அவர் படைத்த சாதனைகளாக அமைந்தது.

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles