“ஐக்கிய மக்கள் சக்தியுடன் எமக்கு போட்டி கிடையாது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் ஜே.வி.பியுடன்தான் எமக்கு சமர் உள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி பற்றி நாம் சிந்திப்பதுகூட இல்லை.
எமக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியை எடுக்க வேண்டியதில்லை. அடுத்த ஜனாதிபதியை உருவாக்கும் சமரிலேயே இருக்கின்றோம். எதிர்க்கட்சி தலைவர் பதவி வேண்டியதில்லை.”- என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.










