28,29 சுற்றுலா கொண்டாட்ட விழா: மோகினி எல்ல பகுதி கோலாகலம்

2026 சர்வதேச சுற்றுலாத் தினத்தை முன்னிட்டு, மத்திய மாகாணத்தின் கொண்டாட்ட விழா நல்லத்தண்ணி மோகினி எல்ல (Mohini Ella) நீர்வீழ்ச்சிக்கு அருகில் நடத்துவதற்கு மத்திய மாகாண சுற்றுலாத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மத்திய மாகாண ஆளுநர் கலாநிதி ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ மற்றும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர ஆரச்சி ஆகியோரின் தலைமையில் இதற்குரிய நிகழ்வுகள் நாளையும் (29), நாளை மறுதினமும் (30) நடைபெறவுள்ளன.

சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ள நோர்வூட் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மவுசாக்கலை நீர்த்தேக்கம், மரேயா (Murray) நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பிரதான நீர்வீழ்ச்சிகள் மற்றும் புனித சிவனொளிபாத மலையை அடிப்படையாகக் கொண்டு சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்குரிய வேலைத்திட்டங்களைச் செயற்படுத்த மத்திய மாகாண சுற்றுலாச் சபை திட்டமிட்டுள்ளது.

இதற்குச் சமாந்தரமாக மோகினி எல்ல, கார்ட்மோர் (Gardmore) நீர்வீழ்ச்சி மற்றும் மரேயா நீர்வீழ்ச்சி ஆகிய பகுதிகளில் நீர் விளையாட்டுக்கள் மற்றும் சாகசச் சுற்றுலா (Adventure Tourism) நடவடிக்கைகள் பலவற்றை நடத்துவதற்கும் மத்திய மாகாண சுற்றுலாச் சபை ஏற்பாடு செய்துள்ளது.

மத்திய மாகாண சுற்றுலாத் திணைக்களம், நல்லத்தண்ணி சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்துடன் இணைந்து இந்த இரு நாள் சுற்றுலா தினக் கொண்டாட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பான கள ஆய்வுகளையும் ஆயத்த நிலைகளையும் கண்டறிவதற்காக மத்திய மாகாண சுற்றுலாச் சபையின் அதிகாரிகள் (27) ஆம் திகதி மோகினிஎல்ல பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

நல்லத்தண்ணி நகரத்தை மையமாகக் கொண்டு 2026 சுற்றுலா தினக் கொண்டாட்ட விழாவை நல்லத்தண்ணியில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்தமைக்காக ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் தமது நன்றியைத் தெரிவிப்பதாக நல்லத்தண்ணி சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் டபிள்யூ.எம். சாந்த குமார தெரிவித்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles