“ மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால் 9 மாகாணங்களிலும் அரசாங்கம் மண்கவ்வும்.”- என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், தொழிற்சங்க தலைவர் சமன் ரத்னப்பிரிய கூறியவை வருமாறு ,
“ அரசாங்கத்துக்கு ஈராண்டு, நாட்டுக்கு மாட்சி என தேசிய மக்கள் சக்தியினர் பிரச்சாரம் முன்னெடுத்து வருகின்றனர். ஆனால் நாட்டுக்கு என்ன மாட்சி என தெரியவில்லை. வாழ்க்கைச்சுமை அதிகரித்துள்ளது. பொருட்களின் விலைகள் எகிறியுள்ளன.
ஆளுங்கட்சியினருக்கு வேண்டுமென்றால் இந்த ஆட்சி சிறப்பாக இருக்கலாம். ஆனால் மக்களுக்கு சிறப்பு அல்ல. நல்லவற்றை செய்திருந்தால் எதற்காக அரசாங்கம் நல்லமா என கூட்டங்களை நடத்தி கேட்க வேண்டும்.?
மாகாணசபைத் தேர்தல் நடைபெற்றர்ல 9 மாகாணங்களிலும் இந்த அரசாங்கம் தோல்வி அடையும் என்பது உறுதி.”-என்றார் சமன் ரத்னபிரிய.










