நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ராமநாதன் அர்ச்சுனா தனது யூடியூப் பக்கத்தில் நேற்றிரவு வெளியிட்ட காணொளில் இரட்டை அர்த்தம் கொண்ட வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார்.
தான் ஊத்த கதை கதைப்பது பற்றி வயது போனவர்கள் தன்னை மன்னிக்கும்படியும் நக்கல் பாணியில் அவர் கருத்து கூறியுள்ளார்.
“ உரல் இருக்கும் இடத்தில் உலக்கை இருக்க வேண்டும், இரண்டு உலக்கையை வைத்து என்ன செய்வது” என்றெல்லாம் அவர் இரட்டை அர்த்த சொற்களை பயன்படுத்தியுள்ளார்.
அமைச்சர் சந்திரசேகர் மற்றும் சபாநாயகர் தொடர்பிலும் பொருத்தமற்ற வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்தியுள்ளார்.
“ ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், கல்வி கற்ற வைத்தியர் இப்படி பொறுப்பற்ற விதத்தில், பொதுநலன் கதைக்காமல் கதைப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல” என சமூகவலைத்தள பதிவாளர்கள் சுட்டிக்காட்டிவருகின்றனர்.
