தனிநபர் சுதந்திரத்தைப் பறிக்கும் PSTA வேண்டாம்!

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்திற்கு எதிராக இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர்கள் சங்கமும், சமூக ஊடக வெளிப்பாட்டுக்கான கூட்டமைப்பும் இணைந்து இன்று (06) முற்பகல் பத்தரமுல்ல பொல்தூவ சந்திக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தன.

அரசாங்கம் மீளப்பெற வேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டது.

இந்தப் போராட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன், யுக்திய பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான சுனந்த தேசப்பிரிய, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

 

Related Articles

Latest Articles